எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் பெண்கள் பங்கெடுத்து அரசியலுக்குள் வாருங்கள், நான் வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சருமான அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை அதிகாரியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வன ஜீவராசிகள் இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 யானைகளை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் தனியார் இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வளர்க்கப்பட்டு வந்த 38 யானைகள் தற்போது வனஜீவராசிகள் தினைக்களத்தினால் தடுத்து…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புகையற்ற புகையிலையடங்கிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் இறக்குமதியை தடை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றிலை பாவனைக்கு தடையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் சாதாரண மக்களுக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் காணி இன்னும் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.