தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது. தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து கட்சியொன்றினை பதிவு செய்ய முற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.
இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.