நாளைய தினம் மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை(28) இரவு கைது செய்ததுடன் 1500 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும்.
தீவிரவாத தொழிற்சாலை நடத்துபவர்கள், வெறுப்புணர்வை சித்தாந்தமாக வைத்திருப்பவர்கள் எங்கள் மக்களுக்கு ஆதரவாக, பிரதிநிதியாகப் பேசத் தேவையில்லை என்று ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பேசியுள்ளது.
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், வேறு வழியின்றி மக்கள் பயணிக்கும் சாதாரண விமானத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா புறப்பட்டார். ஐ.நா.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்…
கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த நேரத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தனர்.