விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் வேட்பு மனுதாக்கல் நாளை மாலையுடன் நிறைவு பெறு கிறது.
இதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்.21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து, இரு தொகுதி களுக்கும் கடந்த 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டியில் அதிமுக – திமுகவும், நாங்குநேரியில் அதிமுக – காங்கிரஸும் மோதுகின்றன. இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 20 பேர்
இந்நிலையில், நேற்று மாலை வரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், விக்கிரவாண்டியில் தேசிய மக்கள் சக்தி கட்சி – 4, சுயேச்சைகள் 8 மனுக்கள் என 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாங்குநேரியில் சுயேச்சைகள் – 7, நாம் தமிழர் கட்சி – 1 என 8 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாளை (செப்.30) மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அக்.1-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. அக்.3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு அக்.21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்.24-ம் தேதியும் நடைபெற உள்ளன.
முக்கிய கட்சிகள்
இதற்கிடையே, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் (விக்கிரவாண்டி), ரெட்டியார்பட்டி வெ.நாராயணன்(நாங்குநேரி) ஆகிய இருவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதேபோல் விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படு கிறது.

