அரச நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக விஷேட குழுவொன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நால்வர் கொண்ட விஷேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லா எமது மக்களை இழிவுபடுத்திக் கூறியுள்ளார். இத்தகையவர்களின் முகத்திரையைக் கிழித்து மலையக மக்கள் என்றால் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரை சுத்தம் செய்யும் சிறப்பு செயற்திட்டம் இன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில்…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்களினால் மஹரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் நேற்றைய தினம் இரண்டு மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டே, ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க…
கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கத்தில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீறமாட்டோம். மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காப்பாற்றுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.