யாழ்ப்பாணம் மாநகரை சுத்தம் செய்யும் சிறப்பு செயற்திட்டம் இன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்தச் செயற்திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுத்தனர். அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் உட்பட உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.

அதேவேளைக் குறித்த செயற்திட்டம் முனியப்பர் ஆலயம் முன்றிலில் இருந்து முன்னெடுக்கப்பட்டமையால் தபாலக சந்தி முதல் தந்தை செல்வா சதுக்கம் வரையிலான காங்கேசன் துறை வீதி காலை 7 மணி முதல் 8.30 மணி வரையில் மூடப்பட்டு இருந்தது.



