தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட மூன்று பேர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
அட்டன் நகரில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் அட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழைய வாடி வீட்டுப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்திலும் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.…
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் சட்டவிரோத வாக்குரிமை இருப்பதை கண்டறிந்த அமலாக்கத் துறை, வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும், ஆய்வகங்களையும் பொதுமக்கள் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிடலாம். இதற்கு டிச.5-ம் தேதிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
எஸ்ஐஆர் என்பது மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி என்றும், அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜகவின் எண்ணம் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.