வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

34 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குமரிக்கடல் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது