அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு

774 0

ayurvedicஅனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆயர்வேத மருந்து பொருட்கள் அதிகம் போதையை ஏற்படுத்தக்கூடிய வகையில் உற்பத்தி செய்யப்படுவதாக பண்டாரநாயக்க ஆயர்வேத ஆய்வு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினால் நாடளாவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆயர்வேத ஆணையாளர் எல் கே திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.