அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

442 0

usதமது நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு அண்மையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இது பாரிய மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதுதொடர்பில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில் சீனாவின் உள்விவகாரம் நீதித் துறையின் செயல்பாட்டில் அமெரிக்கா தலையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ அமெரிக்கா அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.
சீனாவின் தேசிய பாதுகாப்புஇ சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.