நிலையவள்

நீர்கொழும்பில் தங்கியிருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

Posted by - April 25, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறியுள்ளார்.  பாகிஸ்தானில் காணப்படுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அவர்கள் இந்த நாட்டுக்கு…
மேலும்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் !

Posted by - April 25, 2019
யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில்…
மேலும்

கொழும்பு நகரில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை

Posted by - April 25, 2019
கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும்

மாவனல்லையில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள்

Posted by - April 25, 2019
மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள், மாவனல்ல பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் தற்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. சந்தேகத்திற்கிடமான…
மேலும்

தென்னிலங்கையில் பேருந்து ஒன்றினுள் மர்மப்பொதி!

Posted by - April 25, 2019
தென்னிலங்கையின் அம்பலாந்தோட்டையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை விசேட அதிரடிப் படையினர் சோதனை செய்து வருகின்றனர். பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் வெளியேற்றிவிட்டு இந்த சோதனை தற்போது நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில்…
மேலும்

தற்போது அம்பாறையில் பதற்றம்! நிறுவனங்களிலிருந்து அவரசரமாக வெளியேறும் ஊழியர்கள்!

Posted by - April 25, 2019
அம்பாறை பொத்துவில் பகுதியில் வெடிபொருள் இருப்பதாக இன்று காலை 10 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் விரைந்துள்ளனர். இதனால் அம்பாறையில் பதற்ற நிலை காணப்படுவதாக எமததுபிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை பொத்துவில் ஊறணிப்பகுதியில்…
மேலும்

மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் !

Posted by - April 25, 2019
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டாலும்  தொடர்ந்து மீண்டும் மின்சாரத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே இருப்பதனாலேயே  மின்சாரத்தடை…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகா அல்லது சம்பிக்கவுக்கு வழங்குங்கள் – திகாம்­பரம்

Posted by - April 25, 2019
சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்­சே­கா­வுக்கோ சம்­பிக்க ரணவக்­க­வுக்கோ வழங்கி தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நடவ­டிக்கை எடுக்­க­வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்­வாறு…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு

Posted by - April 25, 2019
கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதனால்…
மேலும்

என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது -ஹிஸ்புல்லாஹ்

Posted by - April 25, 2019
கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான்…
மேலும்