நிலையவள்

நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும் – கமல் குணரத்ன!

Posted by - January 4, 2020
நாட்டுக்கு ஒழுக்கமான மக்கள் அவசியம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமெனவும்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 4, 2020
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 1050 ஆவது நாளான  இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அண்மையில் சிறையில் மரணமடைந்த தமிழ் அரசியல் கைதியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள், தங்களது…
மேலும்

சிறுபான்மைக் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி- ஐ.தே.க

Posted by - January 4, 2020
சிறுபான்மையினக் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யவே, அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்து வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனுஷ நாணயக்கார…
மேலும்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பணத்தொகை அதிகரிப்பு

Posted by - January 4, 2020
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின்…
மேலும்

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

Posted by - January 4, 2020
கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்…
மேலும்

ஜனாதிபதி கொள்கை பிரகடனத்தை செயற்படுத்த சுதந்திர கட்சி ஆதரவு

Posted by - January 4, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´கொள்கை பிரகடனத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவளிப்பதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். ஶ்ரீலங்கா…
மேலும்

காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க விசேட குழு – அமைச்சரவை அனுமதி

Posted by - January 4, 2020
காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 02.01.2020…
மேலும்

இலங்கையர்கள் 7 பேர் நைஜீரியாவில் கைது

Posted by - January 4, 2020
சட்டவிரோத எரிபொருள் மோசடி தொடர்பில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா கடற்படையினர் கடந்த மாதத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்களுக்கிடையில் 7 இலங்கையர்கள், 57 நைஜீரிய…
மேலும்

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 3, 2020
பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில்…
மேலும்

தினேஸ் – ஜோன்ஸ்டன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்பு

Posted by - January 3, 2020
பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள்…
மேலும்