கணக்காய்வாளர் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம் – JVP

348 0

அமைச்சர்களின் களவுகளை சரிப்படுத்தி காட்டுவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மாத்தறை நகரில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது நடைமுறையிலிருக்கும் தேசிய கணக்காய்வாளர் சட்டத்தில் அமைச்சரவை மூலம் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment