ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி!-இ.இரவீந்திரன்

294 0

வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டத்திற்கமைய  சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அத் திட்டத்தினுள் வருகின்ற ஆரம்ப பாடசாலைகள் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக  அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்காக வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களின் கீழ் உள்ள 35 கோட்டங்களிலும் இருந்து தலா 2 பாடசாலைகள் வீதம் மொத்தம் 70 பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட விளையாட்டு மைதானம் , பொழுது போக்கு கூடம் உள்ளிட்ட சகல வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவதோடு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றும் அமைக்கப்படும்.

இவ்வாறு தேர்வு செய்த 70 பாடசாலைகளில் 29 பாடசாலைகளிற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டில் 25 புதிய கட்டிடங்கள்  அமைக்க எண்ணி  12 பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டு விட்டது. அதேபோன்று மேலும் 13 பாடசாலைகளிற்கான கட்டிடங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் பாடசாலைகளுல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள். குறித்த திட்டம் வட மாகாணத்தின் 35 கோட்டத்திலும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட அணைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. கல்வியை மேம்பட வைக்கும் நோக்கில் ஆரம்பக் கல்வியில் இருந்தே மேம்படுத்துவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். என்றார்

Leave a comment