அரசியல் கைதிகள் நாளை உணவு தவிர்ப்பு போராட்டம்!

3636 15

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் நாளை (09.10) ஒரு நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அத்துடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பல போராட்டங்களை நாளை (09.10) முன்னெடுக்கவுள்ளனர்.
அந்த வகையில், மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் 70 பேர் நாளை (09.10) உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர்ந்தும் தாம் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் கைதிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Leave a comment