சிரிய, துருக்கி எல்லை பிராந்தியத்தில் தாக்குதல் சம்பவம்

439 0

சிரிய, துருக்கி எல்லை பிராந்தியத்தில் துருக்கிய துருப்பினருக்கும் ஹேய்ட் தஹ்ரிர் ஹல் ஷாம் (ரயலநவ வுயாசசை யட-ளூயஅ) துப்பாக்கி தாரிகளுக்கும் இடையே மோதல் சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்டுள்ள மனித உரிமை சிரியன் கண்கானிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி தாரிகளை கொண்ட அமைப்பு சிரியாவில் இயங்கும் அல்கய்தாவின் கிளை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஒசாமா பின்லாடனின் சர்வதேச அமைப்பு இதற்கான நிதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிக ஆயுததாரிகளின் குழுக்கள் எல்லைப் பிராந்தியத்திற்கு விரைவதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எல்லை பிராந்தியத்தில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் துருக்கிய துருப்பினரின் கனரக வாகனங்கள் செல்வதை அவதானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment