கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது!

606 0


கத்தலோனியர்களே!
———————————
கத்தலோனியர்களே
உங்கள் விடுதலைப்பாடல்
கத்தலோனியாவிலிருந்து
உலகெங்கும் கேட்கிறது!
சனனாயகத்தினை
நம்பும் அயலவர்கள்
உங்கள் அயலிலே!
அரசுகள் எப்போதும்
விடுதலையை ஏற்பதில்லை
அது அவர்களின்
மரபுமல்ல
ஆனாலும்
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கிறது!
உலகின் சில சக்திகள்
இன்று உறுமாலாம் – ஆனால்
நாளை கைகோர்ப்பர்
ஒன்றிணைவர்
வளங்களின் வழியே
தமது நலன்களைக் காண்பர்
ஆனாலும் என்ன
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கும்!
தானாகக்
கிடைப்பதல்லவே
விடுதலை
தொடர் முயற்சியே
சுதந்திரக் காற்றினை
உங்கள் தேசவெளியில்
வீசச் செய்திருக்கிறது!
வீச்சின் விடுதலை
உறுதியாகும்
அப்போது
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கும்!
உங்களைப்போல்
எங்கள் விடுதலைப்பாடலும்
ஒருநாள் கேட்கும்
உலகில் இன்னும்
நீதியின் சுவடுகள்
முற்றாக அழியவில்லையென்ற
எம் தலைவனின்
நம்பிக்கை பொய்க்காது
அதனால்
எங்கள் விடுதலைப்பாடலும்
ஒருநாள் கேட்கும்!

குறியீடு இணையத்துக்காக
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி

Leave a comment