பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

618 0

பல குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர், தங்கம் மற்றும் மேலும் பல பொருட்களுடன் அங்குலான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் எனவும்  அறியவந்துள்ளது.

குறித்த நபருக்கு எதிராக மொரட்டுவ, பாணந்துறை, ஹொரனை மற்றும் பொரலஸ்கமுவ காவற்துறை பிரிவுகளில் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பல பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment