சர்வதேச ஆசிரியர் தினத்தில் இலங்கை ஆசிரியர்கள் போராட்டத்தில்

323 0

சர்வதேச ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி அன்று, கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment