அமெரிக்காவை எதிர்கொள்ள 5 மில்லியன் ராணுவத்தினர்

272 0

அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் வடகொரிய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

டிரம்ப் அரசியின் அச்சுறத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு வடகொரிய ராணுவத்தில் இணைந்து போராட 4.7 மில்லியன் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் மற்றும் பணியாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இதில் 1.22 மில்லியன் பேர் இளம் பெண்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி வடகொரியாவின் புகழில் களங்கம் விளைவிக்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,

இதனால் கொதித்தெழுந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து தங்களை ராணுவத்தில் இணைத்துக் கொள்ள கோரி பதிவு செய்துள்ளதாகவும் அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வடகொரிய மக்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் சமீப காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான பிரசாரம் வடகொரியாவில் அதிகரித்து வருவதாக கூறும்

ஆய்வாளர்கள், குறிப்பாக வடகொரிய தென் கொரிய யுத்த காலத்தில் அமெரிக்க ராணுவத்தினர் வடகொரிய பெண்களை துஷ்பிரயோகம் செய்து சித்திரவதைக்கு உட்படுத்துவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியை முதுமையினால் மனத் தளர்ச்சியுற்றவர் என கிம் ஜோங் வுன் பகிரங்கமாக கிண்டல் பேசியதும், அமெரிக்காவை சாம்பலாக்குவேன் எனவும் ஜப்பானை மூழ்கடிப்பேன் எனவும் மிரட்டல் விடுப்பதும் வடகொரிய மக்களிடம் ஆதரவு பெறுவதற்காகவே எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே அடுத்துவரும் சில நாட்களில் வடகொரியாவிடம் இருந்து கடும் அச்சுறுத்தல் எழலாம் என தென் கொரியா ஆருடம் தெரிவித்துள்ளது.

வடகொரிய காம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன ஆண்டு விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இதனால் அந்த விழாவை நினைவு கூறும் பொருட்டு அக்டோபர் 10 மற்றும் 18 ஆம் திகதி இடையே வடகொரியா ஏதேனும் தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என தென் கொரியா அச்சம் தெரிவித்துள்ளது.

Leave a comment