மின்சார சபையின் ஊழியர்களிற்கு மகிழ்ச்சிகர செய்தி!

308 0

மின்சார சபையின் பொறியிலாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல ஊழியர்களினதும் வேதனத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு 13 சதவீதமும், தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கு 6 சதவீத வேதன அதிகரிப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த வேதன அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மின்சார ஊழியர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது.

இன்று மதியம் 12 மணிக்கு முன்னர் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால் நாளை மதியம், மின்சாரத்துறை அமைச்சை சுற்றிவளைக்க உள்ளதாகவும் இலங்கை மின்சார சேவை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தற்போது வழமையான முறையில் இடம்பெறுவதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைச்சு, எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சார பாவனையாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக சில இடங்களில் சிறியளவு மின்சாரம் தடை ஏற்படுகின்ற போது அதனை வழமைக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் புத்தளம், ஹப்புத்தளை உள்ளிட்ட பல இடங்களில் மின்சார விநியோகத் தடை நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment