காவற்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

273 0

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 6 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அவர்களை அடுத்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நொவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வைத்து விஷேட தேவையுடைய இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக விஷேட தேவையுடைய இராணுவ வீரரான நிஷாந்த மிஹிராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment