ரோஹிங்ய அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கையின் முடிவு-ரணவக்க

221 0

ரோஹிங்ய அகதிகளை இலங்கைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அகதிகள் விடயத்தைக் கையாளும் போது, நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் உரிய செயற்பாட்டு வரைமுறைகளை மீறி எந்த தருணத்திலும் செயற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த விளக்கமளிப்பு ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்து 30 ரோஹிங்ய அகதிகள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதன் பின்னரே ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அதேபோன்று இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே, அகதிகள் உயர்ஸ்தானிகரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment