டிலானின் விருப்புக்கு தேர்தலை வைப்பதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை

403 0

விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி ´தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை´ என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல் முறை தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் நிலைப்பாடு மற்றும் தலைவரின் சுயாதீனத் தன்மை தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக அமைச்சர் டிலான் பெரேரா நேற்று (17) ஜாஎலயில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பாக  கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அமைச்சர் டிலான் பெரேரா ஆற்றிய உரையில், ´நாம் பாராளுமன்றத்தினுள் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு கையுயர்த்தும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்ப்பில் எமது உறுதியை வழங்கினார்.

20 வது திருத்தத்தின் படி அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அவர் கூறியிருந்தார்.

எனினும், விருப்பு வாக்கு முறைக்கு தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் அன்பு காட்டுகிறார் போலவே தெரிகிறது என அவர் குறிப்பிட்டார்.

அவர் சிறந்த தேர்தல் ஆணையாளராக இருந்தார். ஆனால், இந்த தருணத்தில் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர் போல செயற்படுவதாக டிலான் பெரேரா தெரிவித்தார்.

Leave a comment