தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.

654 0

இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நாளாகும். கடந்த முப்பது வருடங்களுக்குமுன் இதே நாள் எங்கள் மரணத்தின்மூலம்; மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் மலரும் தமிழீழத்தினை ஏனைய மாவீரர்களுடன் வானத்தில் எங்காவது ஒரு மூலையில் நானும் இருந்து பார்த்துமகிழ்வேன் என்றான் எங்கள் திலீபன் .அவனது கனவை நிதர்சனமாக்க,

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் ஜேர்மனி,பிரான்ஸ் ஊடாக சுவிஸ் பாசெல் நகரை (15) நேற்று மாலை வந்தடைந்தது.இன்று காலை பாசெல் நகரில் இருந்து ஆரம்பமான பயணம்
லீஸ்ரால்,சொலத்தூன்,பீல்,மூர்த் தன்,லௌசானூடாக பயணித்து திங்கட்கிழமை ஜெனீவா முருகதாசன் திடலை சென்றடையும்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெனீவா முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave a comment