லண்டன் சுரங்க ரெயில் வெடி விபத்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்

5675 0

லண்டன் சுரங்க ரெயில் வெடி விபத்துக்கு அமெரிக்க அதிபர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது. நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த வெடி விபத்தில் 29 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லண்டன் சுரங்க ரெயில் வெடி விபத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிடுகையில், தோல்வி அடைந்த தீவிரவாதிகள் மற்றொரு தாக்குதலை லண்டனில் நிகழ்த்தியுள்ளனர்.  அவர்களை மிகவும் கடுமையான முறையில் கையாள வேண்டும். இணையதளம்தான் இவர்களின் முக்கிய ஆட்சேர்ப்பு கருவியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a comment