தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை

2171 0

தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம்.

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றின் விளக்­கம் சாத­க­மாக வராத பட்­சத்­தில் அதற்கு மாற்­றீ­டாக எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக் க­லாம் என்று உயர்­மட்­டத்­தி­னர் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ ய­டுத்தே அரச தலை­மைப்­பீ­டம் இந்­தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்­ளது.

20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வைக் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தின் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் அரச தலை­மைக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ள நிலையிலேயே மேற்­படி பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை­க­ளைக் கலைக்­கும் அதி­கா­ரத்தை நாடா­ளு­மன்­றத்­துக்கு வழங்­கும் வகை­யி­லும் அனைத்து மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே­நா­ளில் தேர்­தல் நடத்­தும் நோக்­கி­லும் அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை அரசு முன்­வைத்­தி­ருந்­தது.

20இற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்­தில் மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு குறித்­தான தனது விளக்­கத்தை உயர் நீதி­மன்­றம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்­கும் அனுப்­பி­வைத்­துள்­ளது.

20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை பொது வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மைப் பலத்­து­டன் நிறை­வேற்­ற­வேண்­டும் எனக் கூறி­யுள்­ளது. பொது வாக்­கெ­டுப்­பைத் தவிர்த்து மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மைப் பலத்­து­டன் மாத்­தி­ரம் 20ஐ நிறை­வேற்ற முடி­யாத நிலை அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு மீது பொது வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டி­வ­ரும் என்­ப­தால் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் அதை செய்­யா­தி­ருப்­பதே அர­சின் நிலைப்­பா­டாக இருக்­கின்­றது.

இந்த மாதத்­து­டன் ஆயுள்­கா­லம் முடி­வ­டை­கின்ற மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை உரிய திக­தி­யில் நடத்­த­வேண்­டும். ஒக்­ரோ­பர் 2ஆம் திகதி வேட்­பு­ம­னுக்­கள் அறி­விப்பை தேர்­தல் ஆணைக்­குழு விடுக்­கும்.

தற்­போ­தைய அர­ச­மைப்பு, மாகாண சபை­கள் சட்­டத்­தின் பிர­கா­ரம் ஆயுள்­கா­லம் முடி­வ­டை­கின்ற மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒத்­தி­வைக்க முடி­யாது. அதைச் செய்­யவே அரசு 20ஆவது திருத்­தத்­தைக் கொண்­டு­வந்­தி­ருந்­தது. தற்­போது அந்த முயற்சி கைகூ­டாது என்­ப­தா­லேயே தேர்­தல் மீது அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ளது.

Leave a comment