ஒரு தமிழ்க் குடும்பத்தின் பயணக் கனவுகளை துன்பத்துக்குள்ளாக்கிய எயர் கனடா நிறுவனம்!

228 0

தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்களின் பின்னர் மகேஸ்வரன் முதல் தடவையாக தனது தாய்நாடு செல்லும் பயணம்.

ஆனால் இவர்களது பயண திட்டம் எயர் கனடாவின் செய்கையால் சிதைக்கப்பட்டது. எயர் கனடா ஏஜன்ட் இவர்களை தவறான செக்-இன் லைனிற்கு அனுப்பியதிலிருந்து ஆரம்பித்தது அனைத்தும் எனலாம். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணித்தியாலம் 40-நிமிடங்கள் இருக்கையில் சரியான வரிசைக்கு திருப்பி அனுப்பபட்டனர். அவர்களிற்கு முன்னால் லண்டன் செல்லும் மூவர் நின்றதாக தெரிவித்தனர். ஏஜன்ட் ஒருவர் இவர்களை சரிபார்த்த சமயம் ஐந்து பேர்கள் கொண்ட குடும்பம் செல்ல முடியாதென மனேஜர் அறிவித்ததாக திவாகரன் தெரிவித்தார். இவர்களிற்கு கவலை ஏற்பட்டதுடன் அழும் நிலைமைக்கு வந்து விட்டனர்.

விமானத்தில் இடம் இல்லாததால் தாங்கள் செல்ல முடியவில்லை என இவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் அப்படி அல்ல. இது குறித்து சிபிசியிடம் எயர் கனடா தெரிவித்ததாவது விமானம் புறப்படும் போது எட்டு இருக்கைகள் வெறுமையாக இருந்ததென தெரிவித்துள்ளது. ஆனால் திவாகரன் குடும்பத்தினர் எவருக்கேனும் இருக்கை வழங்கப்படாததற்கான காரணத்தை நிறுவனம் தெரிவிக்கவில்லை. பதிலாக குடும்பத்தினர் வேறொரு ரிக்கெட்டிங் லைனிற்கு அனுப்பப்பட்டு அவர்களது விமானத்திற்கு மீள புக் செய்யுமாறு கூறப்பட்டனர். ஒரு மணித்தியாலம் காத்து நின்ற பின்னர் இரவு 11மணியளவில் இவர்களை கைவிட்ட நிலையில் புக் செய்யும் இடம் மூடப்பட்டது.

மற்றுமொரு ஏஜன்டிடம் இவர்கள் திருப்பி அனுப்ப பட்டனர் ஆனால் அவர் தனக்கு ரிக்கெட் வழங்க பயிற்சி அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களுடன் தொடர்பு கொண்ட அதே மனேஜர் இவர்களை அணுகி வீடு செல்லுமாறும் அடுத்த நாள் பயணத்திற்கு மற்றொரு விமானத்திற்கு எயர் கனடா பதிவு செய்யுமென மிக சாதாரணமாக தெரிவித்துள்ளார். அதிகாலை 12.45மணிக்கு குடும்பம் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளது. அடுத்த நாள் பயணத்திற்காக மீண்டும் விமான நிலையம் சென்றுள்ளனர்.

விமான நிறுவன ஏஜன்ட் ஒருவர் முதல் நாள் இவர்கள் பயணத்திற்காக விமான நிலையம் வரவில்லை என “no-show,” காட்டுகின்றதென கூறப்பட்டுள்ளது. பயண நிறுவம் மூலம் இவர்கள் ரிக்கெட் வாங்கியிருப்பதால்”private fare,” பதிவாகி இருக்கின்றதென தெரிவித்த ஏஜன்ட் இவர்கள் பயண நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் பயண நிறுவனத்தினர் அனைவரும் குழப்பத்திற்காளானார்கள். எயர் கனடாவின் இத்தகைய நடவடிக்கைகளிற்கு காரணம் புரியவில்லை. குடும்பத்தினர் புதிதாக பயண சீட்டுக்களை பெற்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களது பயணத்திற்கு டொலர்கள் 12,326.38 செலவழித்துள்ளனர்.

விடுமுறை கழித்து நாடு திரும்பிய இவர்கள் தங்களிற்கு ஏற்பட்ட இன்னல்களையும் அசம்பாவிதங்களையும் எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். பயணத்தில் தங்களிற்கு ஏற்பட்ட இன்னல்கள் சங்கடங்களிற்கு எய கனடா மன்னிப்பு கோர வேண்டும் எனவும் விரிவான விளக்கம் தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். “இனி ஒரு போதும் எய கனடாவில் பயணம் செய்ய மாட்டேன்” என கூறிய திவாகரன், ”நான் எனது மரண படுக்கையில் இருந்து வைத்தியத்திற்காக யு.எஸ் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் இறப்பனே தவிர எய கனடாவில் பயணிக்க மாட்டேன” என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக விளக்கமொன்றை சிபிசி செய்தி எயர் கனடாவிடம் கேட்ட போது நிறுவனத்தின் பேச்சாளர் பீற்றர் விற்ஸ்பற்றிக் “குறிப்பிட்ட பிரச்சனைக்குள் என்னால் வரமுடியாது” என மின் அஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார். இப்பதில் அவர்கள் தங்கள் தவறை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதை தெரிவிக்கின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published.