தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த பெண்

241 0

தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த பெண் அனைவருக்கும் ‘கல்தா’ கொடுத்தாள்.

தாய்லாந்தில் உள்ள நங் ஹாய் மாகாணத்தை சேர்ந்த பெண் ஜரியாபார்ன் புயாயய் (32). இவளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவள் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டாள்.

நமது நாட்டில் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் வரதட்சனை வழங்க வேண்டும். ஆனால் தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.எனவே பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் திருமண மோசடியை கையாண்டாள். 11 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்தாள். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை வசூலித்தாள்.

பணம் மட்டுமின்றி கார் மற்றும் லாரி போன்றவற்றையும் பெற்றாள். பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் கல்தா கொடுத்தாள்.

தனது சொந்த ஊருக்கு வந்த அவள் தனது பெற்றோருடன் சேர்ந்து பழ வியாபாரத்தை நடத்தி வந்தாள். ஆகஸ்டு மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்களை மணந்தாள். அழகிய தோற்றம் கொண்ட அவள் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் தனது போட்டோவை பிரசுரித்து அவர்களை வசியம் செய்து மணந்தாள்.அவளிடம் ஏமாந்த ஆண்கள் போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவளை போலீசார் கைது செய்தனர்.

Leave a comment