நியூசிலாந்தில் ஈழத்து யுவதியின் மனிதாபிமான செயற்பாடு!

920 25

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக வழங்கியுள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா, பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இளம் வயதில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார். சமகாலத்தில் பொறுப்பற்ற ரீதியில் கலாச்சார சீரழிவில் இளைய தலைமுறை சிக்கி வருகிறது.

இவ்வாறான நிலையில் விதுஜனாவின் செயற்பாடு பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment