இலங்கையின் காலநிலை தொடர்ந்தும் பாதிப்பு 

820 0

நாட்டின் தெற்மேற்கு பகுதிகளில் மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என காலநிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் அந்த நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை அடைமழை பெய்யக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொத்துவில் முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதியில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே, கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என காலநிலை அவதான மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment