இலங்கைக்கு வரலாற்று தோல்வி – தோனி, கோலி சாதனை 

7293 0

சுற்றுலா இந்திய அணிக்கும இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5க்கு 0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்த போதிலும், நான்காவது விக்கட்டுக்கான லஹிரு திருமன்னே  மற்றும அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தமக்கிடையில் 122 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

எனினும் இலங்கை அணியின் இறுதி 7 விக்கட்டுக்களும் 53 ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்போது இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, 100வது ஸ்டம் முறையிலான ஆட்டமிழப்பை செய்து புதிய சாதனை படைத்தார்.

பதிலளித்த இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோலி 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அதன்மூலம் இந்த ஆண்டில் வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

அத்துடன் அவர் பெற்ற இந்த சதமானது 30 சதமாகும்.

இதன்படி, ஒரு நாள் போட்டிகளின் அதிக சதங்களை பெற்றவர் வரிசையில் ரிக்கி பொண்டினுடன் இணைந்தார்.

பொண்டின் 365 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களை பெற்றுள்ள நிலையில் கோலி 186வது போட்டியில் தமது 30வது சதத்தை பெற்று 2வது இடத்தில் காணப்படுகிறார்.

அந்த பட்டியில் சச்சின் டெண்டுல்கார் 49 சதங்களுடன் முதலிடத்தில் காணப்படுகின்றார்.

இதனிடையே இலங்கை அணி தமது சொந்த மண்ணில் இவ்வாறு ஒரு நாள் தொடரை இழந்துள்ளதும் இதுவே முதல் முறையாகும்.

 

Leave a comment