வடகொரியாவுக்கு பென்டகன் எச்சரிக்கை

285 0

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா செயற்படுமாயின் அதற்கு இராணுவ ரீதியில் பதிலளி கொடுக்கப்படும் என பென்டகன் அறிவித்துள்ளது.

பென்டனின் தலைமைப் பேச்சாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடகொரியா அமெரிக்காவுக்கோ அதன் நேச நாடுகளுக்கோ அச்சுறுத்தலான வகையில் செயற்படுமாயின் இராணுவ ரீதியான பதிலடிக்கு வடகொரியா தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வடகொரியா அணுவாயுத சோதனை மேற்கொண்டு வருவது குறித்து விவாதிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை இன்று கூடுகிறது.

இதன்போது வடகொரியா தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியா அண்மையில் 5 முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இந்த நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள பகுதியில் சக்திவாய்ந்த அணு குண்டு ஒன்றை வடகொரியா நேற்று பரிசோதித்தது.

இதன் காரணமாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment