வடகொரியாவில் பாரிய நில அதிர்வு

191 0

வடகொரியாவில் பாரிய நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா தமது ஆறாவது அணு பரிசோதனையினை மேற்கொண்டதன் காரணமாகவே இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலத்திற்கு அடியில் ஆறு மைல் ஆழத்தில் 5.6 ரிட்ச்சயர் அளவில் நில அதிர்வு இடம் பெற்றுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த அதிர்வு உணரப்பட்டவுடனேயே தென் கொரியா அவசர பாதுகாப்பு சபை கூட்டம் ஒன்றை கூட்டி நில அதிர்வு குறித்து ஆராய்ந்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜொங் யுன், புதிய வகையான ஹட்ரஜன் குண்டு என கூறப்படும் பொருள் ஒன்றுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடனான செய்திகள் வெளியாகி சில மணி நேரத்தின் பின்னர் இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.

புதிய வகையான இந்த ஹயிட்ரஜன் குண்டை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் குறித்த இலக்கை நோக்கி ஏவ முடியும் என வடகொரிய அரச ஊடகங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் வடகொரியாவினால் வெளியிடப்பட்ட தகவல்களை சுதந்திரமான முறையில் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வடகொரியாவின் புங்கீ-ரை அணு பரிசோதனை தளத்திற்கு அருகாமையிலேயே இந்த அதிர்வு இடம்பெற்றுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நில அதிர்வு பாரிய வெடித்தன்மையினால் ஏற்பட்டிருக்கலாம் என சீன நில அதிர்வு முகாமைத்துவ நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

 

Leave a comment