போதைப்பொருள் பரிமாற்றும் மத்திய நிலையமாக மாறும் இலங்கை-சாகல

399 0

இலங்கை யுத்த காலத்­துக்கு பின்னர் போதைப்­பொருள் பரி­மாற்றும் மத்­திய நிலை­ய­மாக மாற ஆரம்­பித்­துள்­ளது என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க களுத்­து­றையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

“விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வா­தத்­துக்கு நாங்கள் முகம் கொடுத்தோம், தற்­போது அது இல்லை. ஆனால், தற்­போது சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­துக்கு முகம்­கொ­டுக்க தயா­ராக வேண்டும்.

விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­துக்கு முகம்­கொ­டுக்க தேவை­யான முறையில்   பயிற்­று­வித்­த­லுடன்  அதற்கு தேவை­யான  வேலைத்­திட்­டங்­களை நாங்கள் மேற்­கொள்ள­ வேண்டி இருக்­கின்­றது. அதே­போன்று விசேட அதி­ர­டிப்­ப­டைப்­பி­ரிவை புதுப்­பிப்­ப­தற்கும் விரைவில் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம்.

அத்­துடன் நாடு எதிர்­கொண்­டுள்ள பிர­தான பிரச்­சி­னை­யாக போதைப்­பொருள் பிரச்­சினை இருந்­து­வ­ரு­கின்­றது. இலங்கை யுத்த காலத்­துக்கு பின்னர் போதைப்­பொருள் வியா­பா­ரத்தில் மத்­திய நிலை­ய­மாக மாற ஆரம்­பித்­துள்­ளது.

அதா­வது போதைப்­பொருள் பரி­மாற்ற மத்­திய நிலை­ய­மாக மாறி­யுள்­ளது. போதைப்­பொருள் வேறு நாடு­களில் இருந்து இங்கு வரு­கின்­றது. இங்­கி­ருந்து அது ஏனைய நாடு­க­ளுக்கு கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றது. என்­றாலும் இதில் ஒரு பகுதி நாட்டில் வைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் எமது பிள்­ளைகள் மற்றும் மாண­வர்கள் மத்­தியில் இந்த போதைப்­பா­வனை  அதி­க­ரித்­துள்­ள­தாக எங்­க­ளுக்கு அறி­யக்­கி­டைக்­கின்­றது. இன்று சிறிய வகை­யான போதை குளிசை பாவ­னையில் இருக்­கின்­றது. அதனை கண்­டு­பி­டிப்­பது மிகவும் சிர­ம­மாகும்.

இளம் சந்­த­தி­யி­ன­ருக்கு இது பாரிய  பிரச்­சி­னை­யாகும். அத்­துடன் போதை வியா­பா­ரத்தால் நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம்.

போதைப்­பொருள் வியா­பாரம் பாரி­ய­ளவில் பணம் சம்­பா­திக்கும் வழி­யாகும். பணம்தான் இன்று அதி­காரம் செலுத்­து­கின்­றது. பயங்­க­ர­வா­திகள் போதைப்பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­வதும்  அத­னூ­டாக   பணம் சம்­பா­திப்­பதும்  அவர்­க­ளது பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையை கொண்­டு­செல்­வ­தற்­கா­க­வாகும், சர்வதேச பயங்கரவாதிகள் இன்று போதைப்பொரு வியாபாரத்தில் பிரதான வியாபாரிகளாக இருக்கின்றனர்.

அதனால் இலங்கையில் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முறியடிப்பதற்கு புதிய பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

Leave a comment