முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உள்ள முறையான சட்டநடவடிக்கையின் போது அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக பீள்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சரத் பொன்சேகா இந்த கருத்தை வௌியிட்டார்.
எவ்வாறாயினும் சர்வதேச மனிதவுரிமைகள் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நிரபராதி என உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசியமான நடவடிக்கை எடுக்கும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராம ஆயுர்வேத பாதுகாப்பு சபா மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல் வௌியிட்டார்.

