நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் மீட்பு

1571 19
படகு விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வரை இன்று அதிகாலை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

அனலைத் தீவுக்கு மேற்கு பகுதியில் இந்தப் படகு விபத்துக்கு முகம்கொடுத்திருந்த நிலையில், அங்கு ரோந்துப் பணிகளுக்காகச் சென்ற வேளை அதனை கண்ணுற்ற படையினர், இவர்களை மீட்டுள்ளதாக, வடக்கு கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற சகலவற்றையும் வழங்கிய கடற்படையினர், அனைவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

 

Leave a comment