வேலூர் ஜெயிலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி மனு

231 0

வேலூர் ஜெயிலில் ஜீவசமாதி அடைய முருகன் கடந்த 18-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், தானும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜெயிலிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டார்.

இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் முருகன் கடந்த 18-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தனது கணவரான முருகனின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரிடம் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டு 3-வது நாளாக இன்று அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இதற்கிடையில் நேற்று மாலை சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் நளினி மனு அளித்தார். அந்த மனுவில் எங்கள் மீது பொய்யான வழக்கு போடப்பட்டு 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்.

மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கேட்டும் கிடைக்கவில்லை. சிறையிலேயே ஜீவசமாதி அடைய எனது கணவர் முருகன் உண்ணாவிரதத்தை கடந்த 18-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். நானும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். நளினி

Leave a comment