கோகுல இந்திரா கட்சி பதவி பறிப்பு – அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

363 0

அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ப.குமார் எம்.பி., மகளிர் அணி இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் கீர்த்திகா முனியசாமி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருக்கும் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ., அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அந்த பொறுப்பில் ஞானமூர்த்தி நியமிக்கப்படுகிறார்.

அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் முத்தையன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் உமாதேவன் நியமிக்கப்படுகிறார். தற்போது சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்நாதன் எம்.பி. அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக கோனேஸ்வரன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்களாக மணிகண்டராஜா, ஜெயராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment