எம்முடன் இணையவுள்ளவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்- மஹிந்த

3901 100

கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து எந்தவொரு எம்.பி.யும் அரசாங்கத்தின் பக்கம் செல்வதற்கு இல்லையெனவும், அரசாங்கத்திலுள்ள பெரும்பாலான அமைச்சர்களே கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூட்டு எதிர்க் கட்சியுடன் இணையவுள்ளவர்களின் பெயர் விபரங்களை மிக விரைவில் ஊடகங்களில் அறிவிக்கவுள்ளதாகவும், தற்பொழுது அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment