அர­சாங்கத் தரப்பு வெளி­யிடும் கருத்தில் எவ்­வித உண்­மை யும் இல்லை

246 0

ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­டைய வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு விசேட நீதி­மன்றம் அமைக்க வேண்டும் என்­கின்ற யோசனை நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கும், சட்­டத்தின் முன் சக­லரும் சமம் என்­கின்ற தார்­மீ­கத்­திற்கும் முர­ணா­ன­தாக உள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலேயே இவ்­வி­ட­யத்தைக் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களின் ஊழல் மோச­டிகள் வெளிப்­பட்­டுக்­கொண்டி­ருக்­ கின்­றன. இவ்­வா­றான சூழலில் மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­காக எனது குடும்ப உறுப்­பி­னர்­களை குற்றப் புல­னாய் வுப் பிரிவு மற்றும் பாரிய நிதி மோசடி விசா­ரணைப் பிரி­வுக்கு அழைத்து விசா­ரணை நடத்­து­கின்­றனர்.

எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்குச் சொந்­த­மான 500 கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­கொண்ட சொத்­துக்கள் நீதி­மன்­றினால் அல்­லது அர­சாங்­கத்­தினால் அர­சு­ட­மை­யாக்­கி­யுள்­ள­தாக அர­சாங்கத் தரப்பு வெளி­யிடும் கருத்தில் எவ்­வித உண்­மை யும் இல்லை.

எனவே எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்குச் சொந்­த­மான எந்­த­வொரு சொத்தும் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­ட­வில்லை. எனினும் வேறு சில­ருக்குச் சொந்­த­மான சொத்­துக்­களை எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது என காண்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.

ஆகவே நல்லாட்சி அர­சாங்கம் தவிர்த்து வேறு எந்த அரசாங்க மும் எதிர்த்தரப்பு அரசி யல்வாதிகளுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ இவ்வாறு நெருக்கு தல் செய்யவில்லை எனவும் அதில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment