தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை – ஜனாதிபதி 

317 0

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவே பொருளாதார சபை நிறுவப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் தேசிய கைத்தொழிற்துறையின் அபிவிருத்தி என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படுதாக அவர் கூறியுள்ளார்.

விவசாயநாடு என்ற வகையில் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான மிக வலுவானதொரு செயற்திட்டத்தின் தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான முறையானதும், வினைத்திறனானதுமான செயற்திட்டத்தின் தேவையை நிறைவேற்றுவதன் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபையின் செயற்பாடுகளுக்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவையாகவுள்ளது.

உள்நாட்டு கைத்தொழில்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அநீதி ஏற்படும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அமைந்த எந்தவொரு வர்த்தக உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment