89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் திருட்டு! பொய்யான வழக்குபதிவு

378 0
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக் குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 51 இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா பெறுமதியான 89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் என்பவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு கடந்த 7ம் திகதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் கனடாவில் இருந்து வந்த இவர்கள் வெளிநாட்டில் காப்புறுதி பெற்றுக்கொள்வதற்காக பொய்யான வழக்குபதிவு செய்து நாடகம் ஆடியதை கண்டுபிடித்தனர்.
கனடாவில் இருந்து வந்து பொய்யான முறையில் முறைப்பாடு தொடர்பாக நான்கு நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் பொய்யான வழக்குபதிவு  செய்துள்ளதை கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கனடாவில் இருந்து வந்த வரணி பகுதியில் வசிக்கும் குடும்பத்திற்கு எதிராக வழக்குபதிவு செய்து எதிர்வரும் 16 ம் திகதி கொடிகாமம் பொலிசாரால் சாவகச்சேரி நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

Leave a comment