தவராசா முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்-மு.தம்பிராசா

476 0

வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.,

தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாணசபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு கூறுகின்ற தவராசா முதலில் தன்னுடைய உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவியை உடனடியாக துறக்கவேண்டும்.

பதினாறாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர்  வாழ்வாதார உதவிகள் தேவை என்று வேண்டுகோள்விடுத்திருக்கின்றார்கள்.

கடந்த 30வருட போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட போராளிகளும்,பாதிக்கப்பட அனைத்து மக்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவர்களது பொருளாதாரம் வளம் பெற நாம் அயராது பாடு படவேண்டும்.

இதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment