ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு – அவசர விசாரணை வழக்காக எடுத்துக் கொள்ள தீர்மானம்

256 0
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளி தொடர்பான வழக்கை, அவசர விசாரணை வழக்காக எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த வழக்கு திர்வரும் 14ஆம் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கின் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதை அடுத்து அந்த மூன்று பேர் மாத்திரமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment