கேப்பாபிலவு மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து முகாம்களை அகற்றுவதற்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் எமது காணி எமக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையில் போராடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
கேப்பாபிலவில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியான 111 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க 6 மாத காலம் செல்லுமெனவும் முகாம்களை அகற்ற பணம் வேண்டுமெனவும் இராணுவம் தெரிவித்தது.
இதன் பிரகாரம் முகாம்களை அகற்றுவதற்கு 148 மில்லியன் ரூபா நிதியினை மீள்குடியேற்ற அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவத்திடம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் எமது காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
165 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் எமது நிலம் எமக்கு கிடைக்குமென்ற ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதை கைவிடப் போவதில்லையெனவும் சிவில் அமைப்பின் பிரதிநிதி எஸ்.சந்திரலீலா தெரிவித்தார்.

