தென்னாப்பிரிக்க ஜனாதிபதி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

291 0

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஜேக்கப் ஷூமா இருந்து வருகிறார்.

அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன.

எனவே அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆளுங்கட்சி எம்.பி.க்களே எதிராக இருந்ததால் ஜனாதிபதி ஷூமா பதவி இழப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் யாரும் எதிர்பாராதவிதமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

ஜனாதிபதி ஷூமாவுக்கு ஆதரவாக 198 வாக்குகளும்;, எதிராக 177 வாக்குகளும் கிடைத்தன.

இவர் மீது ஏற்கனவே 8 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது 9வது முறை கொண்டு வரப்பட்டு அதிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment