பல ஏக்கர் வயல் நிலங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்!

317 0

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம்  ஒரே நாளில் பல இடங்களிலும் வயல் நிலங்களிற்குள் உள் நுழைந்த யானைக் கூட்டம் பல ஏக்கர் வயல் நிலங்களை அழித்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக் குளத்திற் கீழ் நெற்செய்கை பன்னப்பட்ட பிரதேசத்திற்குள்ளும் அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புலிமச்சிநாதகுளம் , கரிப்பட்டமுறிப்பினை அண்டிய பிரதேச வயல்பகுதிகளிலுமே மேற்கண்டவாறு  நேற்றைய தினம்  ஒரே நாளில் பல இடங்களிலும் வயல் நிலங்களிற்குள் உள் நுழைந்த யானைக் கூட்டம் பல ஏக்கர் வயல் நிலங்களை அழித்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் கல்மடுக்குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்பட்ட வயல்ப்பகுதிக்குள் நுழைந்த 7ற்கும் மேற்பட்ட யானைகள் வயல்பகுதிகளை மிதித்து நாசம் செய்துள்ளன. இவ்வாறு யானைகள் சுமார் 10 ஏக்கர் வயல்ப்பகுதிகளிற்குள் அதிகமாக நடமாடியதில் 5 ஏக்கர் வயல்ப்பகுதி முழுமையாக அழிவடைந்துள்ளது.

இவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்தின் புலிமச்சிநாதகுளம் , கரிப்பட்டமுறிப்பினை அண்டிய பிரதேச வயல்பகுதிகளிலும் நிறைந்த யானைகள் வயல்பகுதிகளை நாசம் செய்துள்ளது அதனால் 3 ஏக்கர் வயல்கள் முற்றாக அழிவடைந்துள்ளது. தற்போது நிலவும் வரட்சி காரணமாக யானைகள் தீர் நிலைகளைத் தேடி வயல்ப் பிரதேசம் மற்றும் குடிமனைகளிற்குள் உட்பிரவேசிப்பதனாலேயே இவ்வாறான அழிவுகளை எதிர்நோக்குவதாக இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் சிவமோகன் குறிப்பிட்டார்.

Leave a comment