வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை –  டொனால்டு ட்ரம்ப்  

259 0

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது

வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு சீனாவினால் எளிதில் தீர்வு காண முடியும்.
எனினும் அந்த நாடு எதுவுமே செய்யாததது வருத்தமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை.
வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா, ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என்று ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

Leave a comment