முல்லைத்தீவு – கேப்பாபுலவு காணி விடுவிப்பு 10 நாட்கள் அவகாசம் தருமாறு இரா சம்பந்தன் கோரிக்கை

184 0

முல்லைத்தீவு – கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் தமக்கு 10 நாட்கள் அவகாசம் தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அவர் கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கேப்பாபுலவில் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்படவேண்டிய 111 ஏக்கர் காணி தொடர்பிலும் 4ம் கட்டமாக விடுவிக்கப்படவேண்டிய 70 ஏக்கர் காணி தொடர்பிலும் இன்று காலை சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீள்குடியேற்ற அமைச்சில் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இராணுவத்தளபதிஇ பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவாநந்தா முதலமைச்சரின் பிரதிநிதியாக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் திறைசேரி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்போது 111 ஏக்கர் காணியில் இருந்து விலகி செல்ல இராணுவம் இணங்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அங்கிருந்து விலகிசெல்வதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த பணிகளை செய்து முடிக்க எதிர்வரும் டிசெம்பர் வரை கால அவகாரம் தேவை என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

எனினும் டிசெம்பர் வரைக்குமான கால அவகாச கோரிக்கையை கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகள் ஏற்று கொள்ளவில்லை.

இதன்போதே அந்த மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்பதற்காக 10 நாட்கள் கால அவகாசத்தை கோரினார்.

பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு செயலாளர் உட்பட்ட தரப்புக்களை சந்தித்து இந்த விடயத்திற்கான தீர்வை எட்டப்போவதாக அவர் உறுதியளித்தார்.

 

 

Leave a comment